தேக்கு மரச் சாலைகளும்...
என்ன நான் குறைவா?
என வளரந்த கமுகுகளும்...
சின்னவன் தான் எனினும்
சிறப்பானவன் எனவே
சிலிர்த்து காய்த்து நிற்கும்
செவ்விளனீர் மரமும்...
என்ன அழகு எந்தன் ஊருக்கு ?
என்ன குறைவிருக்கு எந்தன் கவிதைக்கு ???
காற்றின் பாட்டுக்கு
தலையாட்டும் நெல்வயலும்...
ஆற்றிசையே பின்னணியாய்
பாட்டிசைக்கும் குயிலினமும்...
சேற்று வயலுகுள்ளும்
சேலை நனையாது
நாற்று நடுகின்ற
நம் பெண்டிர் இடையசைவும்...
காற்றுக்கசையாது
கஞ்சிக் கலயந்தன்னை
ஏற்றித் தலையில் வைத்து
எடுப்பாக நடை போடும்
என்னவளின் நடையழகும்...
என்ன அழகு எந்தன் ஊருக்கு ?
என்ன குறைவிருக்கு எந்தன் கவிதைக்கு ???
[ தொடரும்... ]


No comments:
Post a Comment