Friday, May 4, 2007

ஒரு தலைக் காதல் இல்லாத ஒரு காதல்

ஓரு தேர்த் திருவிழாவில் தான்
சந்திந்துக் கொண்டோம்
அவளும் தேர் பார்க்கவில்லை
நானும் தேர் பார்க்கவில்லை

காதல் குதிரை கனைக்கப் பார்ததது
கடந்த கால அனுபவங்கள் கடிவாளம் போட்டது

தவறுதலாக நான் தேர் பார்த்தபோது
அவள் காணாமல் போனாள்

இன்னும் ஒரு நாள் லைப்ரரியில் ...
நானும் புத்தகம் தேடவில்லை
அவளும் புத்தகம் தேடவில்லை

தாயுடன் வந்திருந்தாள்
ஆங்கிலம் கலந்த தமிழில் பேசினாள்

தவறுதலாக நான் புத்தகம் தேடியபோது
அவள் காணாமல் போனாள்

நண்பனின் திருமண நாள்

நான் பலகாரம் அடுக்கிக் கொன்டிருந்தேன்
அவள் பலகாரம் கொடுத்துக் கொன்டிருந்தாள்

நானும் திருமணம் பார்க்கவில்லை
அவளும் திருமணம் பார்க்கவில்லை

தாலி கட்டும் நேரம்
எங்களைச் சுற்றி ஒருவரும் இல்லை

அமைதியாக அருகில் வந்தாள்
ஆங்கிலம் கலந்த தமிழில்
தயங்கித் தயங்கித்
தன் காதலைச் சொன்னாள்

பூமி என் தலையில் சுற்றியது...

தோல்விகள் எனக்குப் பழகிப் போனவை தான்
ஆனாலும்
இப்படி ஒரு தோல்வியை நான்
எதிர் பார்க்கவில்லை

ஆம் முதல் முறையாக
ஒரு தலைக் காதல் இல்லாத
ஒரு காதலில் நான் தோற்றுப் போனேன்

அடுத்த மாதம்
எனக்குத் திருமணம்
அமைதியாக
எடுத்துச் சொன்னேன்

கண்களில் நீருடன் அவள்
காணாமல் போனாள்.


1 comment:

Bahee said...

ஓ இப்படியும் நடந்திருக்கோ?